By facilitating tissue regeneration and repair, this method offers significant relief for patients suffering from such conditions.
உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமாகக் காணப்படுகின்ற PRP சிகிச்சை முறை பற்றி விளக்கமளிக்கின்றார், Dr.A.A.M.Fuhaim (MBBS, DipSm, DABRM (USA), MD-SEM) PRP சிகிச்சையானது உலகளாவிய ரீதியில் பிரபல்யமான நவீன மீள் உருவாக்கல் மருத்துவத்தின் (Regenerative Medicine)ஒரு முக்கியமான சிகிச்சை முறையாகும்.உடலின் பாதிப்படைந்த பாகங்கள் மீள் உருவாக்கத்திற்கு உட்பட்டு புதுப்பிக்கப்படுவதன் மூலம் பூரண குணம் ஏற்படுகின்றது.எனவே இந்த சிகிச்சையானது நோயின் நிலைமை கண்டறியப்பட்டு அதற்குரிய வகையில் சிகிச்சை வழங்கப்படும் இடத்து தசை,மூட்டு,என்பு(musculoskeletal)சார்ந்த பாரிய பிரச்சினைகளுக்கு இலகுவில் சிகிச்சை அளிக்க முடியும்.
எனவே முழங்கால் மூட்டு தேய்வு(Osteoarthritis), தோள்பட்டை மூட்டு பிரச்சினைகள்(Shoulder Rotator cuff injury) முழங்கை மூட்டு பிரச்சினைகள்(Tennis elbow),குதி மூட்டுவாதம்(planter fasciitis), இடுப்பு வலி(Back pain )சார்ந்த பிரச்சினைகளுக்கு இதன் மூலம் சிறந்த சிகிச்சை வழங்க முடியும்.